ஆலயம் அறிவோம்- Mount Kailash திருக்கயிலாயம் (Post. 9355)


WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9355
Date uploaded in London – –8 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 7-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!
IF U WANT TO LISTEN TO HER TALK, PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM OR YOUTUBE.COM/GNANAMAYAM (DATE 7-3-2021)
“மாலை எழுந்த மதியே போற்றி, மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி, மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக்கரும்பின் தெளிவே போற்றி,அடியார்கட்கு ஆர்அமுதம் ஆனாய்போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி, கயிலைமலையானே போற்றி போற்றி”
திருநாவுக்கரசர் திருநாமம் போற்றி, போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது விநாயகர், முருகனுடன் சிவ-பார்வதி உறைந்து பிரபஞ்சத்தை அருளாட்சி புரியும் ஸ்தலமான திருக்கயிலாயம் ஆகும். இந்தத் தலம் இமயமலையில் வடபால் மேற்குத் திபெத்தின் பகுதியில் அமைந்துள்ளது.டெல்லியிலிருந்து செல்வோர் முதலில் 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்திய சீன எல்லையில் உள்ள லிபுலெக்கை அடைந்து அங்கிருந்து 97 கிலோமீட்டர் வடக்கில் சென்று கைலாயத்தை அடையலாம். SWAMI_48@YAHOO.COM
இராவணன் தூக்க முயன்ற மலை எது? கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல புண்ய நதிகள் உற்பத்தியாகும் இடம் எது? இலக்குவன் உயிரைக் காப்பாற்ற அனுமன் தேடிச் சென்ற சஞ்சீவினி மூலிகை உள்ள இடம் எது? கர்ணனை குந்தி பெற்ற இடம் எது? சகுந்தலை வளர்ந்த ஆசிரமம் உள்ள இடம் எது? வேத வியாஸர் மஹா பாரதத்தை இயற்றிய இடம் எது? இது போன்ற நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு ஒரே விடை, மஹாகவி பாரதியாரால் “மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநில மீதிது போற் பிறிதிலையே” என்று புகழப்படும், இமயமலைத் தொடர் பகுதி என்பதே ஆகும்!
காளிதாஸனால் நாகாதிராஜன் – மலைகளின் அரசன் என்று போற்றி புகழப்படும் இமயமலை ஹிந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியோருக்கான புனித மலை.
இங்குள்ள திருக்கயிலாயம் உலகின் புண்ணிய பகுதிகளுக்கெல்லாம் புண்ணியம் தரும் தெய்வீக இடமாகும். இங்குள்ள இறைவர் : கயிலாயநாதர்; இறைவி: பார்வதி பிராட்டியார்; தீர்த்தம் மஹாசிவ தீர்த்தம்.
பிரம்மாவின் மனதில் தோன்றி இங்கு உருவான மானஸசரோவர் ஒப்பற்ற பளிங்கு நீர் போன்ற தூய நீர் கொண்ட உலகின் ஒரே அதிசய அற்புத ஏரி.
15060 அடி உயரத்தில் அமைந்துள்ள வட்ட வடிவமான இந்த ஏரியின் சுற்றுப்பாதை மட்டும் 88 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். இதன் அதிக பட்ச ஆழம் 300 அடி. ஒரு கூழாங்கல்லை இதனுள் போட்டால அது அடியில் அமிழும் வரை அதிசயிக்கத்தக்க விதத்தில் பார்க்கும் அளவு இதன் நீர் தூய்மையானது!
இங்கிருந்து கைலாய மலையைப் பார்க்கும் பக்தர்கள் பரவசப்பட்டு ஆனந்தமடைவர். 21778 அடி உயரம் கொண்டது இந்த தெய்வீக சிகரம். இதைச் சுற்றி வரும் பாதை 52 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஒரு நாளில் இதைச் சுற்றி வருவதாக விரதம் மேற்கொண்டோர் அரும்பாடுபட்டு இந்த கிரிவலத்தை முடிப்பர்.
ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருப்பதாலும் மிக உயரமான இடத்தில் பனிமலையில் நடக்க வேண்டியிருப்பதாலும் இந்த புனித யாத்திரை சற்று சிரமமான யாத்திரையே! இந்த யாத்திரையில் பக்தர்கள் sub zero எனப்படும் மிக குறைந்த உஷ்ணநிலையில், நகரும் பனிப்பாறைகளின் மீது, நடந்து செல்ல வேண்டியிருக்கும். பனிப்பாறைகள் ஒரு நாளைக்கு ஒன்பது அங்குலமே நகர்கிறது என்பதால் இதன் மீது நடக்கும் போது பயம் இருக்காது. ஒரு எடுத்துக்காட்டு சொல்வதென்றால் இங்குள்ள ரக்தவர்ண பனிப்பாறை 13 கிலோமீட்டர் நீளமுள்ளது.மிக அதிக உயரத்தில் கடுங்குளிராக இருக்கும் போது ஏற்படும் மனம் மற்றும் உடல் பாதிப்பு பற்றிய விவரங்களை முன்னராகவே யாத்ரீகர்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். எங்கும் பனித் தோற்றம் என்பதால் SNOW BLINDNESS எனப்படும் பனித்தொடர் பார்வையின்மையைத் தடுக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தலும் அவசியம். மானஸரோவர், ஹம்ஸ குண்ட், அம்ருத் குண்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட புனிதமான ஏரிகள் இந்த இமயப் பகுதியில் உள்ளன. SWAMI_48@YAHOO.COM
இமயமலை, கைலாய சிகர யாத்திரை என்பது ஒரு தெய்வீக யாத்திரை! லக்ஷக் கணக்கான பக்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கைலாய, மானஸ சரோவர் யாத்திரையை மேற்கொண்டு சிவபிரானின் அரிய தரிசனமான கைலாய தரிசனத்தைப் பெற்றுக் கைலாய யாத்திரையை முடித்துப் பெரும் ஆனந்தம் அடைந்து வந்திருக்கின்றனர். முக்திக்கு ஒரு யாத்திரை இந்த கைலாய யாத்திரையே!மானஸசரோவரை அடைய மூன்று பாதைகள் உண்டு. ஒன்று சிக்கிம் வழியாகப் போவது, இரண்டாவது உத்தர்கண்ட் வழியாகச் செல்வது, மூன்றாவது நேபாளத்தில் உள்ள காத்மாண்டு வழியாகச் செல்வது. இந்த மூன்று பாதைகளும் கடினமான மிக நீளமான பாதைகள். இப்போது சென்ற ஆண்டு அதாவது 2020இல் ஒரு புதிய பாதையை இந்திய அரசு அமைத்து இந்த யாத்திரையை மிக மிக எளிதாக்கியுள்ளது.சுந்தரர், ஔவையார், சேரமான் பெருமாள், பெருமிழலைக் குறும்பர் நாயனார் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் கைலைப் பயணம் மேற்கொண்டதை பல நூல்களும் சிறப்புறக் கூறும். அப்பர் கைலை தரிசனத்தை திருவையாற்றில் பெற்ற வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர். SWAMI_48@YAHOO.COM
அருணகிரிநாதர் ஆறு திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார்.
காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் திருக்கயிலாயநாதரும் பார்வதி தேவியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறொம்.
“போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன்
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலைமலையார் மேல்
தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா பிணிகள், வானோர் உலகில் மருவும் மனத்தாரே” நன்றி வணக்கம்!
***

TAGS- திருக்கயிலாயம், KAILASH,